/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
கனவுகளால் தொலைந்த துாக்கம் வாலிபர் தற்கொலை
/
கனவுகளால் தொலைந்த துாக்கம் வாலிபர் தற்கொலை
ADDED : ஏப் 02, 2025 02:41 AM
தென்காசி:தென்காசி அருகே கெட்ட கனவுகளால் துாக்கமின்றி தவித்த வாலிபர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே வேலாயுதபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 27. கேரள மாநிலம் அடூரில் தனியார் மில்லில் வேலை பார்த்தார். இவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வந்ததால் துாக்கமின்றி தவித்தார்.
எனவே சொந்த ஊருக்கு வந்தார். ஊர்மேலழகியான் கிராமத்திற்கு சென்றிருந்தார். அங்குள்ள ஒரு வேப்பமரத்தில் ஏறி வேட்டியால் துாக்கிட்டார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். எனினும் கழுத்து இறுகி மூச்சுச் திணறல் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் வழியில் இறந்தார். போலீசார் விசாரித்தனர்.

