/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
அரசு பஸ் மோதி ஆம்புலன்ஸ் சேதம் இருவர் காயம்
/
அரசு பஸ் மோதி ஆம்புலன்ஸ் சேதம் இருவர் காயம்
ADDED : ஜூன் 21, 2025 09:07 PM

தென்காசி:கடையநல்லுார் அருகே ஆம்புலன்ஸ் மீது அரசு பஸ் மோதியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் , உதவியாளர் படுகாயமுற்றனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் சிராஜ் மில்லத் அறக்கட்டளை நடத்தும் ஆம்புலன்சை முகமது காலித் 35, ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் புளியங்குடியில் இருந்து கடையநல்லுார் நோக்கி அதனை ஓட்டினார். சொக்கம்பட்டி அருகே வந்தபோது மதுரை -- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கனிம வளம் ஏற்றிச்சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பஸ்சும், ஆம்புலன்ஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆம்புலன்ஸ் டிரைவர் முகமது காலித் மற்றும் உதவியாளர் மன்சூர் 26, ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். சொக்கம்பட்டி போலீசார் விசாரித்தனர்.