ADDED : ஏப் 19, 2026 03:20 AM

அ நிறம் | அளவு
தென்காசி: தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டியைச் சேர்ந்த மோகன், தனது நண்பரின் 'மாருதி ஈகோ' காரில் குடும்பத்தினருடன் செங்கோட்டைக்கு சென்றார்.
செங்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்றபோது, காரில் இருந்து புகை வந்தது. உடனடியாக காரில் இருந்து அனைவரும் இறங்கினர். கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் கார் தீக்கிரையானது. செங்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
