ADDED : ஆக 06, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி:சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் ஆடித்தபசு தேரோட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நடக்கும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்றது. ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா மற்றும் மண்டகப்படி கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
9ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி நாளை (ஆகஸ்ட் 7) மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. தெற்கு ரதவீதியில் சங்கரலிங்கசுவாமி, கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கிறார். இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை விடப் பட்டுள்ளது.

