/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
அமைச்சர் விழாவுக்கு வசூல்; ஆடியோவில் டாக்டர் குமுறல்
/
அமைச்சர் விழாவுக்கு வசூல்; ஆடியோவில் டாக்டர் குமுறல்
அமைச்சர் விழாவுக்கு வசூல்; ஆடியோவில் டாக்டர் குமுறல்
அமைச்சர் விழாவுக்கு வசூல்; ஆடியோவில் டாக்டர் குமுறல்
ADDED : ஏப் 10, 2025 06:34 AM

இலத்துார் : தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே இலத்துாரில் நாளை நடைபெறும் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டட திறப்பு விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்கிறார். இந்த விழாவிற்காக சுற்று வட்டாரங்களில் உள்ள, மருத்துவர்கள் தலா பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என, வாட்ஸாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்டார மருத்துவர் ஒருவர், மற்றொரு மூத்த மருத்துவருக்கு அனுப்பிய ஆடியோவில், 'இன்றைக்கு 10,000 ரூபாய் கேட்கின்றனர். நாளை முதல்வர் வந்தால், 20,000 ரூபாய் கேட்பர். நாம என்ன வருவாய் துறையிலா இருக்கிறோம்; சார், வாங்க; எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பேசுவோம்' என, தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோ வெளியாகி, நேற்று மருத்துவத் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அப்படியான வசூல் எதுவும் செய்யப்படவில்லை என மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன் தெரிவித்தார்.
இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், 'பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பக்கூடாது; நேரடியாக மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தர உத்தரவிடப்பட்டுள்ளது' என்றனர்.