/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சொத்து வரி நிர்ணயிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
/
சொத்து வரி நிர்ணயிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
சொத்து வரி நிர்ணயிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
சொத்து வரி நிர்ணயிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது
ADDED : ஏப் 26, 2025 03:04 AM

தென்காசி:சொத்து வரி நிர்ணயிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர் 40, கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் 36. இவர் புளியங்குடியில் நிலம் வாங்கி வீடு கட்டினார். அதற்கு வரி நிர்ணயிப்பதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமரை அணுகினார்.
அவர் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அவ்வளவுதர முடியாது என காளிராஜன் கூறியதால் ரூ. 15 ஆயிரமாவது தாருங்கள் என அகமது உமர் கேட்டார்.
அதையும் தர விருப்பமில்லாத காளிராஜன் ,தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் ஆலோசனையில் ரசாயன பவுடர் தடவிய ரூ. 15 ஆயிரத்தை காளிராஜன் வைத்திருந்தார். தனது வீட்டில் வந்து தொகையை வாங்கி கொள்ளுமாறு கூறினார். நேற்று காலை அகமது உமர், சிவகிரி அருகே தெற்கு சத்திரத்தில் உள்ள காளிராஜன் வீட்டிற்கு சென்றார். அங்கு ரூ. 15,000த்தை வாங்கும் போது மறைந்திருந்த டி.எஸ்.பி., பால்சுதர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ ,எஸ்.ஐ. ரவி உள்ளிட்ட போலீசார் அகமது உமரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். புளியங்குடியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அகமது உமர் நேற்று மாலை திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்.

