/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சிவகாசி பெண் கொலை; உடல் எரிப்பு மாமனார், மாமியார் உட்பட 3 பேர் கைது
/
சிவகாசி பெண் கொலை; உடல் எரிப்பு மாமனார், மாமியார் உட்பட 3 பேர் கைது
சிவகாசி பெண் கொலை; உடல் எரிப்பு மாமனார், மாமியார் உட்பட 3 பேர் கைது
சிவகாசி பெண் கொலை; உடல் எரிப்பு மாமனார், மாமியார் உட்பட 3 பேர் கைது
ADDED : பிப் 21, 2025 02:46 AM

தென்காசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதிநகரை சேர்ந்த ஜெரால்டு மகன் ஜான் கில்பர்ட். பெயின்டர். இவரும் மெட்டூரை சேர்ந்த கமலி 30, என்ற டெய்லரும் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
கமலியின் நடத்தையில் ஜான் கில்பர்ட்க்கு சந்தேகம் ஏற்பட்டது. பிப்.9ம் தேதி வீட்டில் தகராறு ஏற்பட்டதில் கமலியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் இறந்தார். எனவே நண்பர் அருண்குமாரின் காரை வாங்கி அதன் டிக்கியில் கமலியின் உடலை எடுத்துக்கொண்டு தனது சித்தி மகன் தங்க திருப்பதியையும் 22 அழைத்துக்கொண்டு சென்றார்.
பிப். 11 இரவில் இலத்தூர் காட்டுப்பகுதியில் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு சென்றனர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கார் அடையாளம் தெரிந்ததால் அதைக் கொண்டு போலீசார் துப்புத் துலக்கினர். ஜான் கில்பர்ட் மற்றும் தங்க திருப்பதியை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஜான் கில்பர்ட்க்கு கொலை செய்ய உதவியதாக அவரது தந்தை ஜான் ஜெரால்ட், தாயார் ஜெனிபர், மற்றும் பெரியம்மா ஞானசவுந்தரி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து கமலி கொலையில் மொத்தம் கைதானவர்கள் எண்ணிக்கை 5 ஆனது.

