பாம்பு கடித்து வியாபாரி பலி 2 செவிலியர்களுக்கு நோட்டீஸ்
பாம்பு கடித்து வியாபாரி பலி 2 செவிலியர்களுக்கு நோட்டீஸ்
UPDATED : அக் 10, 2026 10:52 PM
ADDED : அக் 10, 2026 09:36 PM

அ நிறம் | அளவு
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லுார் முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி சுடர்மணி 66. இவர் வீட்டில் சாக்குப் பையை அகற்றியபோது கண்ணாடி விரியன் பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சை கிடைக்காமல் சுடர்மணி இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா விசாரணை நடத்தினார். நோயாளி குறித்து முறையாக மருத்துவருக்கு தகவல் தெரிவிக்காத 2 செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சம்பவம் குறித்து கடையநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
