/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
சுகாதார இணை இயக்குநர் பெயரில் பணம் கேட்டு 'வாட்ஸ் அப்' பில் மோசடி
/
சுகாதார இணை இயக்குநர் பெயரில் பணம் கேட்டு 'வாட்ஸ் அப்' பில் மோசடி
சுகாதார இணை இயக்குநர் பெயரில் பணம் கேட்டு 'வாட்ஸ் அப்' பில் மோசடி
சுகாதார இணை இயக்குநர் பெயரில் பணம் கேட்டு 'வாட்ஸ் அப்' பில் மோசடி
ADDED : அக் 22, 2025 07:54 PM

தென்காசி: தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் பிரேமலதா பெயரில் பணம் கேட்டு வாட்ஸ் அப் வழியாக போலியான தகவல் பரப்பிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பிரேமலதாவின் அலைபேசி எண்ணில் இருந்து சிலருக்கு “அவசரமாக பணம் அனுப்ப வேண்டும். புதிய ஜிபே எண்ணில் அனுப்பவும்” எனும் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிலர் சந்தேகமடைந்து நேரடியாக பிரேமலதாவிடம் தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர் விளக்கமளித்தபோது, “நான் எந்தவிதமான பணம் கேட்ட தகவலையும் அனுப்பவில்லை. எனது பெயரை பயன்படுத்தி யாரோ போலியாக அனுப்பியுள்ளனர்” என கூறியுள்ளார். இந்த போலி தகவலின் காரணமாக யாரும் பணம் அனுப்பாததால் எந்தவித நிதி இழப்பும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அலைபேசி, சமூக ஊடகங்கள் வழி பணம் கேட்கும் தகவல்களை நம்பாமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.