/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
தென்காசி கோவில் முன் தீ வைத்த வாலிபர் கைது
/
தென்காசி கோவில் முன் தீ வைத்த வாலிபர் கைது
ADDED : ஜன 05, 2025 12:50 AM

தென்காசி:தென்காசி, காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. ஏப்., 7ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
நேற்று காலை 8:30 மணிக்கு, இக்கோவில் முன் 10 லிட்டர் பெட்ரோல் கேனுடன் சுற்றித்திரிந்த ஒருவர், திடீரென ராஜகோபுர வெளி வாசலில் பெட்ரோலை தரையில் ஊற்றி தீயிட்டார்.
மளமளவெள தீப்பற்றி எரிந்தது. கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அந்த நபர் கோவிலுக்குள் ஓடிச்சென்றார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அவர், 'நான் தான் சிவன்... இது என் கோவில்' என புலம்பிக் கொண்டிருந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர், தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் கிராமத்தைச் ஆனந்த பாலன், 31, என, தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
கும்பாபிஷேகத்திற்கான பணி நடக்கும் நிலையில், கோவிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

