/
உள்ளூர் செய்திகள்
/
தென்காசி
/
பெண் சிசு கொலைக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட யுடியூபர் கைது
/
பெண் சிசு கொலைக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட யுடியூபர் கைது
பெண் சிசு கொலைக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட யுடியூபர் கைது
பெண் சிசு கொலைக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட யுடியூபர் கைது
ADDED : அக் 04, 2025 02:36 AM

தென்காசி:பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகவும், பெண்கள் குறித்து தரக்குறைவாகவும் வீடியோ பதிவிட்ட வாலிபர் தென்காசி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப் பட்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை மகன் திலீபன் 35, - உளறி கொட்டவா - எனும் தனது யு-டியூப் பக்கத்தில் பெண்களை அவ மதிக்கும் விதமாகவும், பெண் குழந்தைகள் அதிக மாகப் பிறப்பதால் பெற்றோர் பாதிக்கப்படுவதாகவும் கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.
மேலும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் உரிமையை பெற்றோர் களுக்கு வழங்க வேண்டும் என்றும், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாகவும் திலீபன் பேசினார்.
தமது முகத்தை பாதியாக மறைத்துக் கொண்டு வீடியோ வெளியிடும் அவர் மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தென்காசி சைபர் கிரைம் பிரிவிற்கு புகார்கள் வந்தன. விசாரணை நடத்திய போலீசார், திலீபனை கைது செய்தனர்.