sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

புதிய டிசைனில் முகூர்த்த பட்டுப்புடவை திகோ சில்க்ஸ் தனி அலுவலர் தகவல்

/

புதிய டிசைனில் முகூர்த்த பட்டுப்புடவை திகோ சில்க்ஸ் தனி அலுவலர் தகவல்

புதிய டிசைனில் முகூர்த்த பட்டுப்புடவை திகோ சில்க்ஸ் தனி அலுவலர் தகவல்

புதிய டிசைனில் முகூர்த்த பட்டுப்புடவை திகோ சில்க்ஸ் தனி அலுவலர் தகவல்


ADDED : ஜூலை 14, 2011 12:31 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவிடைமருதூர்: ''புதிய டிசைன்களில் முகூர்த்த பட்டுப்புடவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,'' என திகோ சில்க்ஸ் தனி அலுவராக பொறுப்பேற்றுள்ள யூஜின் தெரிவித்துள்ளார்.

திகோ சில்க்ஸ் சங்கத்தின் தனி அலுவலகராகவும், இணை இயக்குநராகவும் பொறுப்பேற்று யூஜின் கூறியதாவது: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் திருபுவனத்தில் கடந்த 1955ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை லாபத்தில் செயல்பட்டு வருகிறது. திகோ சில்க்ஸ் எனப்படும் இந்நிறுவனம் திருபுவனத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. திகோ சில்க்ஸ் கடந்த 2010 -2011ம் ஆண்டில் 40.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை விற்பனை செய்து தனது முந்தைய ஆண்டு சாதனை 34.26 கோடி ரூபாயைவிட மிஞ்சி மீண்டும் புதிய சாதனை படைத்துள்ளது. 2011-2012 ம் ஆண்டில் ஜஞுன் 2011 முடிய 10.94 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. திகோ சில்க்ஸ் றுவனம் கைத்தறி முத்திரை, சில்க் மார்க் அங்கீகாரம் பெற்று, உலகத் தரச்சான்று பெற்றுள்ள ஓரே பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கமாகும். இச்சங்கம் சிறந்த வடிவமைப்புக்காக ஜனாதிபதி விருது மற்றும் பட்டு சேவை வேலைப்பாடுகளுக்காக தங்கப்பதக்கம் விருதுபோன்று பல விருதுகளை பெற்றுள்ள றுவனமாகும். இந்றுவனத்தில் குறைந்த விலையுள்ள சேலைகள் 5,000 ரூபாய்க்குள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த குறைந்த விலையுள்ள சேலைகள் ஏழை மக்கள் தரமான பட்டு சேலைகளை அணிய வேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளது. இதன்காரணமாக 5,000 ரூபாய் மதிப்புள்ள சேலைகள் அதிகளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய வண்ணங்களில் புத்தம் புதிய டிசைன்களில் முகூர்த்தப் பட்டுச்சேலை களை ஏராளமாக அறிமுகப்பட்டுள்ளது. இவ்வாறு தனி அலுவலர் யூஜின் கூறினார்.








      Dinamalar
      Follow us