/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பாபநாசம் அருகே ஆற்றில் மூழ்கி பெண் பரிதாப பலி
/
பாபநாசம் அருகே ஆற்றில் மூழ்கி பெண் பரிதாப பலி
ADDED : ஜூலை 12, 2011 12:14 AM
பாபநாசம்: தஞ்சை அருகே பாபநாசத்தில் பெண் ஒருவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக
உயிரிழந்தார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் ஆற்றங்கரை
தெருவை சேர்ந்தவர் செல்லையா. விவசாயியான இவரது மனைவி சுகந்தி (எ)
சுகந்தமலர் (53). இவரது வீட்டில் வளர்த்த ஆடு நேற்று முன்தினம் இரவு குட்டி
ஈன்றது. ஆட்டின் தொப்புள் கொடியை அருகில் இருந்த குடமுருட்டி ஆற்றில்
விடுவதுக்காக நேற்று காலை சென்றார். ஆற்றுக்கு சென்ற சுகந்தி இரவு வரை வீடு
திரும்பாததால், வீட்டில் உள்ளவர்கள் அவரை எல்லா இடங்ளிலும் தேடினர். அவர்
எங்கும் கிடைக்கவில்லை. பண்டாரவாடை அருகே ஒரு பெண்ணின் சடலம் ஆற்றில்
மிதப்பதாக வி.ஏ.ஒ. சிவப்பிரகாசம் பாபநாசம் போலீஸாருக்கு தகவல்
தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி
விசாரித்ததில், அது ஆற்றுக்கு சென்று காணாமல் போன சுகந்தியின் உடல் என
தெரியவந்தது. இதுகுறித்து பாபநாசம் போலீஸார் விசாரிக்கின்றனர்.