sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

விவசாயம், சிறுதொழிலுக்கு ரூ.2,000 கோடி கடன்

/

விவசாயம், சிறுதொழிலுக்கு ரூ.2,000 கோடி கடன்

விவசாயம், சிறுதொழிலுக்கு ரூ.2,000 கோடி கடன்

விவசாயம், சிறுதொழிலுக்கு ரூ.2,000 கோடி கடன்


ADDED : ஆக 12, 2011 01:33 AM

Google News

ADDED : ஆக 12, 2011 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: ''நடப்பாண்டு 2011-2012ல் விவசாயம் மற்றும் சிறுதொழில் உள்ளிட்டவைக்கு 2,000 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்று தமிழக மற்றும் புதுவை எஸ்.பி.ஐ., முதன்மை பொதுமேலாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே எஸ்.பி.ஐ., வங்கியின் இரண்டாயிரமாவது ஏ.டி.எம்., மைய திறப்பு விழா நடந்தது. தமிழக மற்றும் புதுவை எஸ்.பி.ஐ., முதன்மை பொதுமேலாளர் சந்திரசேகரன் ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்து அவர் கூறியதாவது: நம் நாட்டில் 13 ஆயிரத்து 600 எஸ்.பி.ஐ., வங்கி கிளைகள் இயங்கி வருகின்றன. சென்னை, புதுவையில் மட்டும் 821 வங்கி கிளைகளும், தற்போது திறக்கப்பட்டுள்ள ஏ.டி.எம்.,முடன் 2,000 ஏ.டி.எம்., மையங்களும் இயங்கி வருகின்றன. நாடு முழுவதும் 25 ஆயிரம் ஏ.டி.எம்.,கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. ரிசர்வ் அறிவித்துள்ளபடி அனைத்து வங்கிகளிலும் கணக்கு வைத்துள்ளவர்களும் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்.,களை நிறைவாக பயன்படுத்தி வருகின்றனர். ஏ.டி.எம்., மையங்களில் பணப்பட்டுவாடா மட்டுமின்றி நிலுவை விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் பல சேவைகளையும் செய்து வருகிறது. எஸ்.பி.ஐ., சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள கியோஸ்ட், காகிதமற்ற சேவை போன்றவைகளும் ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்., மற்றும் ஷாப்பிங் கார்டுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தானியங்கி கியோஸ்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது பாஸ் புத்தகங்களை தாங்களே பிறர் உதவியின்றி பதிவு செய்து கொள்ளலாம். தங்களுடைய கணக்கில் இருந்து எஸ்.பி.ஐ., யின் மற்றொரு கணக்குக்கோ அல்லது வேறு வங்கியின் கணக்குக்கோ மாற்றம் செய்ய முடியும். இச்சேவை தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல கிளைகளுக்கும் இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். ஸ்டேட் வங்கியின் தனித்துவம் மிக்க காகிதமற்ற சேவை நாடு முழுவதும் 5,180 கிளைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்து. ஏ.டி.எம்., மற்றும் ஷாப்பிங் கார்டு வசதியுள்ள வாடிக்கையாளர்கள் டோக்கன் எடுக்க தேவையில்லை. வங்கியில் வரிசையில் நிற்க தேவையில்லை. சென்னை வட்டத்தில் 400 கிளைகளில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்து. இந்தாண்டு வங்கி நிகர லாபத்தில் சமுதாய நலப்பணிகளுக்காக செலவிடப்பட உள்ளது. இவ்வங்கியின் நிகர லாபம் 900 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதில் ஒரு சதவீதமான 90 கோடி ரூபாயை சமுதாய பணிகளுக்கு செலவிடப்படுகிறது. நடப்பாண்டு 2011-2012ல் விவசாயம் மற்றும் சிறுதொழில் உள்ளிட்டவைகளுக்கு 2,000 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். எஸ்.பி.ஐ., சார்பில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் மற்றும் பெரியகோவிலில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் தஞ்சை புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ஒரு ஆம்புலஸ் வாகனமும் வழங்கப்பட்டது.








      Dinamalar
      Follow us