/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
குட்கா வாங்க வந்தவர் கைது பதுக்கிய 600 கிலோ பறிமுதல்
/
குட்கா வாங்க வந்தவர் கைது பதுக்கிய 600 கிலோ பறிமுதல்
குட்கா வாங்க வந்தவர் கைது பதுக்கிய 600 கிலோ பறிமுதல்
குட்கா வாங்க வந்தவர் கைது பதுக்கிய 600 கிலோ பறிமுதல்
ADDED : ஆக 27, 2024 04:09 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே, 'ஹூண்டாய்' கார் ஒன்று நேற்று முன்தினம் இரவு வெகு நேரமாக நின்றது.
சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராஜ், 21, என்பவரை விசாரித்தனர். காரை போலீசார் சோதனை செய்தனர். கார் பதிவெண் தவறாக இருந்தது.
இது குறித்து கேட்ட போது, அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகமடைந்த போலீசார், காரை பறிமுதல் செய்து அவரை தீவிரமாக விசாரித்தனர்.
கரிக்காடு பகுதியில் கிடங்கு ஒன்றில், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாகவும், அவற்றை வாங்குவதற்காக வந்ததாகவும் அவர் கூறினார். பின், அவர் போலீசாரை கிடங்குக்கு அழைத்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும், கிடங்கில் இருந்த கார் டிரைவரான பிரதீப், டீலர் ஜெயக்குமார், தேஜ்ராம் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.
பட்டுக்கோட்டை டவுன் போலீசார், 600 கிலோ குட்கா பொருட்களையும், இரு கார்களையும் பறிமுதல் செய்து, ஹரிஷ் ராஜை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.