sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தஞ்சாவூர்

/

'ரூ.ஒரு லட்சம் கோடியில் 71 புதிய சாலைகள் விரைவில் வரப்போகுது 3 பசுமை வழிச்சாலை'

/

'ரூ.ஒரு லட்சம் கோடியில் 71 புதிய சாலைகள் விரைவில் வரப்போகுது 3 பசுமை வழிச்சாலை'

'ரூ.ஒரு லட்சம் கோடியில் 71 புதிய சாலைகள் விரைவில் வரப்போகுது 3 பசுமை வழிச்சாலை'

'ரூ.ஒரு லட்சம் கோடியில் 71 புதிய சாலைகள் விரைவில் வரப்போகுது 3 பசுமை வழிச்சாலை'


ADDED : செப் 14, 2024 02:30 AM

Google News

ADDED : செப் 14, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்பகோணம்:தமிழகம் மேலும் வளர்ச்சி பெற, போக்குவரத்து வசதி வேண்டும். நாட்டிலேயே தேசிய நெடுஞ்சாலைப்பணியில் தமிழகம் நம்பர் 1ஆக உள்ளது. ரூ.2 லட்சம் கோடி வரை தமிழகத்துக்கு செலவு செய்துள்ளோம். மேலும், ரூ.ஒரு லட்சம் கோடி செலவழிக்க தயாராக உள்ளோம்.

தமிழக அரசு, நிலம் கையகப்படுத்துவதற்கு முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை விடுத்து பேட்டியளித்தார்.

விக்கிரவாண்டி - கும்ப கோணம் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரையிலான தேசிய நெடுஞ்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விழுப்புரம், கடலுார், அரியலுார், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களை இணைக்கிறது. இப்பணி கொரோனா மற்றும் இயற்கை பேரிடரால் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் திட்டமிட்ட காலத்துக்குமேல் 4 ஆண்டு, ஒரு மாதம் கூடுதலாகி விட்டது. இருப்பினும் சாலை பணிகள் மிகவும் தரமாக அமைந்துள்ளது.

திருச்சி பைபாஸ்


மரக்காணம் முதல் புதுச்சேரி வரையான தேசிய நான்கு வழிச்சாலைப்பணிகள் இன்னும் 3 மாதங்களில் தொடங்கப்படும். திருச்சி பைபாஸ் சாலை 26 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,800 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். இப்பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும்.

தமிழக ஆந்திரா எல்லையில் ரூ.15 ஆயிரம் கோடியில் ராணிப் பேட்டை - சென்னை சாலையை விரிவாக்கம் செய்வதன் மூலம், சென்னை, பெங்களூர், ஆந்திரா இடையி லான கனரக வாகன போக்குவரத்து நெரிசல் குறையும். மதுரவாயல் ரிங் ரோடு, ஸ்ரீ பெரும்புதுார், சமுத்திரவயல், ராணிப்பேட்டை தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்காக, சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே இணைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

புதிதாக 10 என்.எச்.


தேசிய நெடுஞ்சாலைகளில் 10 புதிய சாலைகள் அமைக்கும் திட்டத்தில் 727 கி.மீ. துாரத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில், கோவை - சத்தியமங்கலம், துாத்துக்குடி - கன்னியாகுமரி, ராமநாதபுரம் - ராமேஸ்வரம், ராமேஸ்வரம் - அரிச்சல்முனை, மதுரை - ராமேஸ்வரம், மங்களூர் - விழுப்புரம், மதுரை - ராமேஸ்வரம், சேலம் - வாணியம்பாடி, மதுரை - தேனி, மதுரை-தொண்டி இடையில் நான்கு வழிச்சாலை அமைக்க டெண்டர் விடப்படும்.

தஞ்சை - அரியலுார் - பெரம்பலுார்


தஞ்சாவூர் - அரியலுார் - பெரம்பலுார் இடையே உள்ள இரு வழிச்சாலையை, 4 வழிச்சாலையாக மாற்ற டெண்டர் விடப்படும். வெள்ளக்கோவில் சங்ககிரி, திருப்பூர் ஈரோடு, மதுரை தேனி, போடிநாயக்கனுார் 4 வழிச்சாலை அமைக்கப்படும். இதேபோல் குலேசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான தனிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 71 சாலைகள்


தமிழகத்தில் ரூ. ஒரு லட்சம் கோடியில் 2 ஆயிரத்து 781 கிமீ துாரத்துக்கு புதிதாக 71 சாலைகள் அமைக்கும் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோல் ஆயிரத்து 343 கிமீ துாரத்துக்கு 68 சாலை திட்டங்கள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது.

3 பசுமை வழிச்சாலை


இந்தியா முழுவதும் ரூ. 5 லட்சம் கோடியில் மதிப்பீட்டில் 10 ஆயிரம் கிமீ துாரத்துக்கு 27 புதிய பசுமை வழிச்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 3 பசுமை வழிச்சாலைகள் 187 கிமீ நீளத்தில் ரூ.10 ஆயிரத்து 200 கோடி செலவில் அமைய உள்ளது. பெங்களூரு - -சென்னை எக்ஸ்பிரஸ் சாலை 55 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சாலைப்பணி முடிந்ததும் 2 மணிநேரத்தில் பெங்களூரு செல்லலாம். பெங்களூரு ரிங்ரோடு 35 சதவீதம் முடிந்துள்ளது.

ஒத்துழைப்பு கொடுங்க


தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை. நிதி ஒரு பிரச்னை அல்ல. ரூ. 2 லட்சம் கோடி வரை தமிழகத்துக்கு செலவு செய்துள்ளோம். மேலும், ரூ. ஒரு லட்சம் கோடி செலவு செய்யத்தயாராக உள்ளோம்.

தமிழக அரசு, நிலம் கையகப்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீர், மின்சாரம், போக்குவரத்துதான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அது தமிழகத்தில் நிறைவாக உள்ளது. தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலம். மேலும் வளர்ச்சி பெற போக்குவரத்து வசதி வேண்டும். தமிழக மக்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்து தருகிறேன். சாலை கட்டுமானத்தை அமெரிக்கா தரத்துக்கு நிகராக மத்திய அரசு அமைத்து வருகிறது. இந்தியாவிலேயே தேசிய நெடுஞ்சாலைப்பணியில் தமிழகம் நம்பர் 1ஆக உள்ளது.

கோதாவரி - காவரி திட்டம்


எனது கனவு திட்டமாக, நீர்வள மேலாண்மைத்துறை அமைச்சராக நான் இருந்தபோது ஆறுகளை இணைக்க 49 திட்டம் உருவாக்கப்பட்டது. கர்நாடக - தமிழக காவிரி பிரச்னை குறித்து நான் நன்றாகவே அறிவேன். ஆந்திரா, போலாவரத்தில் உள்ள கோதாவரி ஆற்று நீர் 30 டிஎம்சி கடலில் கலக்கிறது. இந்த தண்ணீரை கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி ஆற்றில் இணைத்து தமிழகத்தின் கடைக்கோடி வரை தண்ணீரை கொண்டு செல்ல திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்குள் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இதற்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இத்திட்டத்தால் தமிழகத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவு அதிகரிக்கும்.

இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.






      Dinamalar
      Follow us