ADDED : ஜூலை 12, 2024 08:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் வெட்டுக்கார தெருவைச் சேர்ந்த சிவக்குமார் மனைவி கல்பனா, 53, இவர் தெலுங்கன்குடிகாடு கிராமத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தஞ்சாவூர் சபாநாயகர் தெருவைச் சேர்ந்த ரமேஷ், 54, என்பவரிடம், 2.90 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார்.
இதற்காக மாதம், 11,600 ரூபாயை வட்டியாக கட்டி வந்துள்ளார். மேலும், தனது தனியார் வங்கி செக் ஒன்றை ரமேஷிடம் கல்பனா கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ரமேஷ் தனியார் வங்கியில் கல்பனா கொடுத்த செக் கொடுத்து, 5 லட்சம் ரூபாய் மோசடியாக கடன் பெற முயற்சி செய்து உள்ளார். இதுகுறித்து அறிந்த கல்பனா தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் செய்தார்.
போலீசார், ரமேஷை நேற்று கைது செய்தனர்.