/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அமெரிக்காவில் அம்மன் சிலை ஏலம்: மீட்க ஓய்வு ஐ.ஜி., கோரிக்கை
/
அமெரிக்காவில் அம்மன் சிலை ஏலம்: மீட்க ஓய்வு ஐ.ஜி., கோரிக்கை
அமெரிக்காவில் அம்மன் சிலை ஏலம்: மீட்க ஓய்வு ஐ.ஜி., கோரிக்கை
அமெரிக்காவில் அம்மன் சிலை ஏலம்: மீட்க ஓய்வு ஐ.ஜி., கோரிக்கை
ADDED : செப் 02, 2024 03:51 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருச்சிற்றம்பலம் புராதன வனேஸ்வரர் கோவிலில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சுவாமி தரிசனம் செய்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சிற்றம்பலம், புராதன வனேஸ்வரர் கோவில், சோழ மன்னர் பராந்தகனால், 1374ல் கற்கோவிலாக கட்டப்பட்டது. சைவ சமய குரவர் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.
இக்கோவிலில், மூன்று முறை சிலை திருட்டு குற்றங்கள் நடந்துள்ளன. இக்கோவிலில், 20 ஆண்டுகளுக்கு முன், சிவகாமி அம்மன் பஞ்சலோக தெய்வ திருமேனி திருடப்பட்டு, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு தனியார் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அருங்காட்சியகம், சிலையை காட்சிப்படுத்தி, தினம் பொருள் ஈட்டி வருகிறது.
தற்போது, சிவகாமி அம்மன் சிலையை ஏலம் விட அந்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிலை மதிப்பு, 10 கோடி ரூபாய்.
இதை தடுப்பது இன்றுள்ள மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் எழுந்துள்ள முக்கிய சவால். வரும், 90 நாட்களுக்குள், சிலையை மீட்க தமிழக அரசும், அறநிலையத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தவறும் போது, மக்களின் ஆதரவுடன் சிலையை மீட்டு கொண்டு வர சட்ட நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.