/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
200 நீர்நிலைகளை துார்வாரிய விவசாயிகளுக்கு பாராட்டு
/
200 நீர்நிலைகளை துார்வாரிய விவசாயிகளுக்கு பாராட்டு
200 நீர்நிலைகளை துார்வாரிய விவசாயிகளுக்கு பாராட்டு
200 நீர்நிலைகளை துார்வாரிய விவசாயிகளுக்கு பாராட்டு
ADDED : ஜூன் 23, 2024 09:27 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலத்துார் கிராமத்தில், கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத்தினருக்கு, 200 ஏரிகள் மற்றும் குளங்களை துார்வாரி சாதனை படைத்ததை பாராட்டும் விதமாக, ஆலத்துார் கிராமத்தினர் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
மேலும், ஆயிரம் நீர் நிலைகள் சீரமைப்பு துவக்க விழாவும் நடந்தது.
விழாவில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுந்தரேஷ் பேசுகையில், ''நீரின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் பண்டைய தமிழர்கள். அதை நாம் இழந்துவிட்டோம்.
நீரின் மகத்துவம் அறியாமல் அழிக்க துவங்கிவிட்டோம். டில்லியில் குடிநீருக்கு அடித்துக் கொள்கின்றனர்.
இதை பார்த்து கூட நாம் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம். மருத்துவமனை, பள்ளி, கோவில் கட்டுவதை விட ஒரு குளத்தை துார்வாருவது புனிதமான செயல்,'' என்றார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி பேசியதாவது:
திருவிழாவிற்கு ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆகும் செலவை துார்வாருவதற்கு இந்த அமைப்பினர் பயன்படுத்தியுள்ளனர். இது இளைஞர்களால் துவங்கப்பட்டு, மக்கள் இயக்கமாக மாறியது.
இந்த 200வது நீர்நிலை, 2,000 நீர்நிலையாக உயர வேண்டும். இளைஞரை ஆக்க சக்தியாக நாம் பயன்படுத்தினால், அவர்களை எந்தளவுக்கு கொண்டு வர முடியும் என்பதற்கு இந்த அமைப்பினர் ஒரு உதாரணம். அரசு செய்ய வேண்டியதை விவசாயிகள் செய்கின்றனர் என்றால், இது அரசுக்கு அவமானம்.
ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரும் பணிகளை செய்யும் அரசு, தனி நபர் அமைப்புகள் துார்வாரும் நிலையை வைத்திருக்க கூடாது.
விவசாயிகளுக்கு அடிப்படை தேவையான ஏரி, குளங்களை அரசு துார்வார வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.