/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஒரே நாளில் 6 குற்றவாளிகளுக்கு கை, கால் எலும்பு முறிவு
/
ஒரே நாளில் 6 குற்றவாளிகளுக்கு கை, கால் எலும்பு முறிவு
ஒரே நாளில் 6 குற்றவாளிகளுக்கு கை, கால் எலும்பு முறிவு
ஒரே நாளில் 6 குற்றவாளிகளுக்கு கை, கால் எலும்பு முறிவு
ADDED : செப் 07, 2024 12:24 AM

தஞ்சாவூர்:
அரியலுார் மாவட்டம், திருமானுாரை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி மனோசித்ரா, 38, கடந்த 1ம் தேதி தனியார் பல்கலையில் படிக்கும் மகளை பார்த்து விட்டு, மீண்டும் ஸ்கூட்டியில் தஞ்சாவூர் -- திருவையாறு பைபாஸ் சாலையில் சென்றார். பைக்கில் வந்த இருவர், மனோசித்ரா அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர்.
தமிழ்ப் பல்கலை போலீசார் திருவையாறு பைபாஸ் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போது, பைக்கில் வந்த இருவரை போலீசார் தடுத்தனர்.
அவர்கள் நிறுத்தாமல் மாற்றுப் பாதையில் செல்லவே விரட்டினர்.
பைக்கை வேகமாக ஓட்டியதில், தப்பியவர்கள் நிலைதடுமாறி வல்லம் முதலை முத்துவாரி பாலத்தில் கீழே விழுந்தனர்.
அவர்கள், திருச்சி மாவட்டம், சிறுபத்துார் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், 33, ராஜ்கிரண், 28, என்பதும், மனோசித்ரா நகையை பறித்ததும் தெரிய வந்தது.
கீழே விழுந்ததில் ராமச்சந்திரனுக்கு காலிலும், ராஜ்கிரணுக்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல, பூதலுாரில், 45 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த, பிரவீன், 32, ராஜ்கபூர், 25, ஆகிய இருவரையும், விசாரணைக்காக, பூதலுார் அழைத்துச் சென்ற போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதில் ராஜ்கபூருக்கு கையிலும், பிரவீனுக்கு காலிலும் முறிவு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் கூட்டுறவு சங்கத்தில் புகுந்து நகை திருடிய இருவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டது. ஆஷிஷ் ராவத் எஸ்.பி.,யாக உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஆறு குற்றவாளிகளுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.