/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்; வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை
/
பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்; வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை
பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்; வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை
பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம்; வி.ஏ.ஓ.,வுக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஏப் 29, 2024 11:33 PM
கும்பகோணம் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர், 2011 ஏப்ரல் மாதம் தன் தாய் மறைவுக்கு பின், அவர் பெயரில் உள்ள நிலத்தை தன் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரி கோவிந்தபுரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
திருபுவனத்தில் பணிபுரிந்த வி.ஏ.ஓ., ரவிக்குமார், 56, பார்த்தசாரதி கொடுத்த மனுவின் படி, பட்டா மாற்றத்துக்கு பரிந்துரை செய்ய, 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுத்த விரும்பாத பார்த்தசாரதி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார். பார்த்தசாரதியிடம் 2011 செப்., 5ம் தேதி ரவிக்குமார் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக பிடிபட்டார்.
இவ்வழக்கு கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா நேற்று, ரவிக்குமாருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும், 7,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.