/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பஸ் கவிழ்ந்து பெண் பலி 25 பேர் படுகாயம்
/
பஸ் கவிழ்ந்து பெண் பலி 25 பேர் படுகாயம்
ADDED : ஏப் 25, 2024 02:22 AM

தஞ்சாவூர்:திருவண்ணாமலையில் இருந்து கும்பகோணம் வழியாக நேற்று முன்தினம் இரவு, அரசு பஸ் தஞ்சாவூருக்கு வந்தது. பஸ்சை டிரைவர் சிவசண்முகம் ஓட்டியுள்ளார். கும்பகோணத்தில் இருந்து நேற்று அதிகாலை அந்த பஸ், 40 பயணியருடன் தஞ்சாவூருக்கு வந்து கொண்டு இருந்தது. அப்போது மானங்கோரை பகுதியில், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
பஸ் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த சிறிய பாலத்தடுப்பு சுவரை உடைத்து, வாய்க்காலில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார், பொதுமக்கள் உதவியுடன் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கிய பயணியரை மீட்டனர்.
இந்த விபத்தில், படுகாயம் அடைந்த 26 பயணியரை ஆம்புலன்சில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சாவூர் கீழலாயத்தை சேர்ந்த லட்சுமி, 50, என்பவர் இறந்தார்.
தொடர்ந்து, மற்ற 25 பயணியருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

