/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
எஸ்.டி.பி.ஐ., நிர்வாகி மீது வழக்கு
/
எஸ்.டி.பி.ஐ., நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஜூன் 02, 2024 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடியைச் சேர்ந்தவர் குலாம் உசேன், 38 எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாவட்டத் தலைவர்.
இவர் ஜன.23ல் தன் பேஸ்புக் பதிவில் 'கூர் தீட்டவில்லை என்றால் முனை மழுங்கிவிடும். அசாத்தியத்தை எதிர்க்கவில்லை என்றால் சத்தியம் புதைந்துவிடும். ஆயுதம் எடு, ஆணவம் சுடு' என்பன உள்ளிட்ட கருத்துக்களை பதிவிட்டிருந்தார். சமூகத்தில் வன்முறையை துாண்டும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறி குலாம் உசேன் மீது திருவிடைமருதுார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.