/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
இயக்குனர் சர்ச்சை பேச்சு டி.ஜி.பி.,யிடம் புகார் மனு
/
இயக்குனர் சர்ச்சை பேச்சு டி.ஜி.பி.,யிடம் புகார் மனு
இயக்குனர் சர்ச்சை பேச்சு டி.ஜி.பி.,யிடம் புகார் மனு
இயக்குனர் சர்ச்சை பேச்சு டி.ஜி.பி.,யிடம் புகார் மனு
ADDED : ஏப் 30, 2024 10:49 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த, அகில பாரத ஹிந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் நிரஞ்சன் என்பவர், சினிமா இயக்குனர் மிஷ்கின் என்பவர் மீது புகார் தெரிவித்து, டி.ஜி.பி.,க்கு இ - மெயிலில் அளித்த மனு:
சமீபத்தில் ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவில், இயக்குனர் மிஷ்கின், 'கோவிலுக்கு போகாதீங்க; சினிமாவுக்கு போங்க' என மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.
மேலும், மாதத்திற்கு ஒரு குடும்பம் ஒரு சினிமாவை பார்க்கவில்லை என்றால் அது குடும்பமே இல்லை. பாவம் செய்பவர்கள் தான் கோவிலுக்கு செல்கின்றனர் என்பது போன்ற ஹிந்து மத வெறுப்பு பேச்சு பேசியுள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மிஷ்கின்