/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கூட்டு பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு கால் முறிவு
/
கூட்டு பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு கால் முறிவு
ADDED : ஆக 16, 2024 01:54 AM

ஒரத்தநாடு:தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டதாரி பெண்ணை, கடந்த 12ம் தேதி, தெற்கு கோட்டையைச் சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது குறித்து, இளம்பெண் அளித்த புகாரின்படி, ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று முன்தினம் ஏழு பிரிவுகளின் கீழ் நான்கு பேரையும் கைது செய்தனர். இந்நிலையில், குற்றவாளிகளை ஒரத்தநாடு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, முக்கிய குற்றவாளியான கவிதாசன் போலீசாரிடமிருந்து தப்ப முயற்சித்து ஓடினார். அப்போது, அவர் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவரை போலீசார், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

