/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
அடிக்கடி வாந்தி, மயக்கம் அம்மங்குடி கிராமத்தில் பீதி
/
அடிக்கடி வாந்தி, மயக்கம் அம்மங்குடி கிராமத்தில் பீதி
அடிக்கடி வாந்தி, மயக்கம் அம்மங்குடி கிராமத்தில் பீதி
அடிக்கடி வாந்தி, மயக்கம் அம்மங்குடி கிராமத்தில் பீதி
ADDED : ஆக 26, 2024 04:39 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே அம்மங்குடி கிராமத்தை சேர்ந்த பலருக்கும் அடிக்கடி வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. கிராம மக்கள் அவ்வப்போது தனியார் மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று முன்தினம் அம்மங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னமாங்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 3 - 48 வயதுடைய, 10க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி ஏற்பட்டு, மயக்கம் ஏற்பட்டதால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பால், அம்மங்குடியை சேர்ந்த கருணாநிதி, 55, இறந்து விட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தரப்பு வலியுறுத்தியுள்ளது.