/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சையில் பெண் கூட்டு பலாத்காரம்
/
தஞ்சையில் பெண் கூட்டு பலாத்காரம்
ADDED : செப் 06, 2024 01:33 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பூதலுாரை சேர்ந்த 45 வயது பெண், கடந்த 3ம் தேதி தன் மகள் வீட்டிற்கு செல்ல, பூதலுாரில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த ராயந்துாரைச் சேர்ந்த பிரவீன், 32, ராஜ்கபூர், 25, ஆகியோர் தனித்தனி டூ - வீலரில் வந்து உள்ளனர்.
அவர்கள், பெண்ணிடம் லிப்ட் கொடுப்பதாக கூறி, பிரவீன் ஒரு டூ - வீலரில் அழைத்துச் சென்றார். பின்னால், ராஜ்கபூர் வந்துள்ளார்.
பூதலுாரை தாண்டியதும், ஆள் இல்லாத வயல் பகுதிக்கு பெண்ணை அழைத்துச்சென்றனர். பெண் கூச்சலிட்டுள்ளார்.
அவரை கட்டையால் தாக்கி, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பெண் புகாரில், பூதலுார் போலீசார் இருவரையும் பிடித்து விசாரிக்கின்றனர்.