/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு ரூ.26 லட்சத்தை இழந்தவர்
/
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு ரூ.26 லட்சத்தை இழந்தவர்
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு ரூ.26 லட்சத்தை இழந்தவர்
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு ரூ.26 லட்சத்தை இழந்தவர்
ADDED : மே 30, 2024 09:35 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த நுர்முகமது,42, முதுகலை பட்டதாரியான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி வந்துள்ளார். மீண்டும் வெளிநாடு செல்வதற்காக முயற்சிகள் செய்து வந்த அவர் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் பார்த்துள்ளார். அதில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது.
இந்த விளம்பரத்தில் இருந்து மொபல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு நுர்முகமது பேசியுள்ளார். அதில் பேசிய மர்ம நபர் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, வாட்ஸ்அப் குழு ஒன்றில் இணைந்துள்ளார்.
இதையடுத்து நுர்முகமது, கடந்த 4ம் தேதி முதல் ஏழு தவணைகளில் 26 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தி வந்தார். முதலில் பணம் செலுத்திய போது அவருக்கு 36 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வந்துள்ளது. ஆனால் அதற்கு பிறகு பணம் வரவில்லை.
விளம்பரத்தில் வந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆஃப் என இருந்துள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த நுார்முகமது, தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.