/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ரூ.1.50 கோடி முறைகேடு புகார் மருத்துவமனை மேலாளர் கைது
/
ரூ.1.50 கோடி முறைகேடு புகார் மருத்துவமனை மேலாளர் கைது
ரூ.1.50 கோடி முறைகேடு புகார் மருத்துவமனை மேலாளர் கைது
ரூ.1.50 கோடி முறைகேடு புகார் மருத்துவமனை மேலாளர் கைது
ADDED : ஜூலை 13, 2024 10:01 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், வ.உ.சி., நகரில், கே.ஜி., என்ற தனியார் மருத்துவமனையில் மனிதவள பிரிவு மேலாளராக, மதுரை, சுந்தரராஜன்பட்டி ஜோக்லு ராஜ்குமார், 36, 2019 முதல் பணியாற்றி வந்தார்.
இவர் மருத்துவமனையில் பயிற்சிக்கு வரும் பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவர்களுக்கு மாதந்தோறும், சம்மந்தப்பட்ட கல்லுாரியில் இருந்து பணம் வசூலித்துள்ளார். மருத்துவமனை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியது, மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கியது, பயிற்சி பெறும் பணியாளர்களுக்கு கேன்டீனில் உணவுக்காக வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மருத்துவமனையின் பணத்தை அவர்களுக்கு கொடுத்தது போல், போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேடு செய்துள்ளார்.
இந்த முறைகேட்டால், மருத்துவமனைக்கு, 1.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஜோக்லு ராஜ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.