/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் பக்தரை நெகிழ வைத்த யானை
/
ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் பக்தரை நெகிழ வைத்த யானை
ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் பக்தரை நெகிழ வைத்த யானை
ஐயாறப்பர் கோவில் தேரோட்டம் பக்தரை நெகிழ வைத்த யானை
ADDED : ஆக 07, 2024 01:33 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று, தர்மாம்பாள் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஏராளமான பெண்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின்படி, கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
இந்நிலையில் தேரானது கீழ வீதியில், நிலைக்கு வந்த போது, தேரை இழுத்த பெண்கள் சற்று தடுமாறியதால், தேர் நிலையில் நிறுத்த முடியாமல் அவதியடைந்தனர். அப்போது, கோவில் யானை தர்மாம்பாள், தன் துதிக்கையால், தேரின் முன்பக்க சக்கரத்தை தள்ளி, தேரை மெதுவாக நிலையில் நிறுத்தியது. இதை கண்ட பெண்கள், பக்தர்கள் வியப்படைந்து கைதட்டி உற்சாகத்தில் ஆழ்ந்தார். யானையின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.