/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
மயிலாடுதுறை - திருச்சி பாசஞ்சர் ரயில் கோளாறு
/
மயிலாடுதுறை - திருச்சி பாசஞ்சர் ரயில் கோளாறு
ADDED : செப் 03, 2024 02:32 AM

தஞ்சாவூர்: மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு தினமும் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில், ரயில் வழக்கம் போல, நேற்று காலை 8:10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு புறபட்டது. காலை, 9:40 மணிக்கு தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சற்று முன், திடீரென ரயில் இன்ஜின் கேபிள் பழுதானது. பணியாளர்கள், சரி செய்ய முடியாததால் ரயில் நடுவழியிலேயே நின்றது.
தஞ்சாவூரில் இறங்க வேண்டிய பயணியர், தண்டவாளத்தில் நடந்து சென்றனர். ஒரு சிலர் காத்திருந்து, நாகூரில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏறி சென்றனர்.
மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் திருச்சி புறப்பட்டது. இதனால் ஏற்பட்ட சிக்னல் பிரச்னையால், திருச்சி -- காரைக்கால் ரயில், ஸ்டேஷனுக்கு சிறிது துாரத்தில் 30 நிமிடம் நிறுத்தப்பட்டு, நிலைமை சீரான பின் சென்றது. இதில், திருச்சி- - காரைக்கால் செல்லும் பயணியர் அவதியடைந்தனர்.