/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தஞ்சையில் 4.75 லட்சம் மரங்கள் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்
/
தஞ்சையில் 4.75 லட்சம் மரங்கள் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்
தஞ்சையில் 4.75 லட்சம் மரங்கள் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்
தஞ்சையில் 4.75 லட்சம் மரங்கள் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்
ADDED : மே 30, 2024 09:58 PM

தஞ்சாவூர்:ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகத்தில் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் துவக்க விழாக்கள் நடைப்பெற்றது.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான துவக்க விழா அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதில் தி.மு.க., தஞ்சாவூர் எம்.எல்.ஏ., நீலமேகம் மரக்கன்றுக்களை நட்டு துவக்கி வைத்தார்.
விழாவில், எம்.எல்.ஏ., நீலமேகம் பேசியதாவது:
காவேரி கூக்குரல் சார்பாக 4,.75 லட்சம் மரக்கன்றுகளை, சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு காவேரி படுகையில் நட வேண்டும் என்ற முனைப்போடு துவங்கப்பட்டுள்ளது. ஈஷா மையத்திற்கு என் வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
மேயர் ராமநாதன் பேசியதாவது:
காவேரி கூக்குரல் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரக் கன்றுகள் நடுவது, விவசாயிகளுக்கு மரக் கன்றுகள் வழங்குவது என்று பல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த குழுவோடு இணைந்து தஞ்சை மாநகராட்சியின் சார்பாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஒவ்வொரு வட்டத்திலும் நட்டு, வளர்த்து மிக சிறப்பான ஒரு சூழலை தஞ்சை மாநகராட்சி ஏற்படுத்தியிருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் மாநகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் அமுத வடிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.