/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஒன்பது தேர்தலுக்கு பின் தஞ்சைக்கு புதிய எம்.பி.,
/
ஒன்பது தேர்தலுக்கு பின் தஞ்சைக்கு புதிய எம்.பி.,
ADDED : ஜூன் 06, 2024 12:09 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் தி.மு.க., -- எம்.பி.,யாக இருந்த பழனிமாணிக்கம், 1984ம் ஆண்டு முதல் முறையாக லோக்சபா தேர்தலில், அறிமுகமாகி ஒன்பது முறை போட்டியிட்டார். இதில், 1996, 1998, 1999, 2004, 2009, 2019ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று ஆறு முறை எம்.பி.,யாக இருந்தார். 2004 -- 2014 வரை மத்திய நிதித்துறை இணையமைச்சராக பதவி வகித்தார்.
இந்நிலையில், 10வது முறையாக அவருக்கு 'சீட்' கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் தி.மு.க., தலைமை, தொகுதிக்கு புதிய முகமான நபரை எம்.பி.,யாக்க வேண்டும் என்ற முனைப்பிலும், பழனிமாணிக்கம் தொகுதி பக்கம் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டினாலும், முரசொலி என்பவரை எம்.பி., வேட்பாளராக அறிமுகம் செய்தது.
புதுமுகம் என்பதால் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில், முரசொலி 5 லட்சத்து 2,345 ஓட்டுகள் பெற்றார். எனினும், பழனிமாணிக்கம், 2019 லோக்சபா தேர்தலில், 3 லட்சத்து 68,129 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை, முரசொலி முறியடிக்க முடியவில்லை என, கட்சியினர் கூறுகின்றனர்.