/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தன்னார்வலர்களால் புத்துயிர் பெற்ற பட்டுக்கோட்டை பிக்காச்சியப்பா ஏரி

ADDED : மார் 01, 2025 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில், 6 ஏக்கர் பரப்பளவிலான பிக்காச்சியப்பா ஏரியை, 45 ஆண்டுகளாக குப்பை கொட்டும் இடமாக நகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வந்தது.
இதனால் அந்த இடமே குப்பை மலையாக மாறி, சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவித்தது. இந்த ஏரியை தன்னார்வலர்கள் குழுவாக இணைந்து, கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தின் உதவியோடு ஆறு மாதங்களில் சீரமைத்துள்ளனர். ஏரியில் இருந்து, 1,48 லட்சம் டன் குப்பை, 4.5 கோடி லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு, 15 அடி ஆழம் துார்வாரப்பட்டுள்ளதால், புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.