/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
முளைப்புத்திறன் இல்லாத நெல் விதைகளுக்கு தடை
/
முளைப்புத்திறன் இல்லாத நெல் விதைகளுக்கு தடை
ADDED : செப் 04, 2024 01:43 AM
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, தஞ்சாவூர், மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், ஆலங்குடி உள்ளிட்ட, 18 தனியார் மற்றும் அரசு விதை நிற்பனை நிலையங்களில், தமிழக அரசின் விதை பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, 36 விதை மாதிரிகள் முளைப்பு திறன் குறித்த ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு, விதை பரிசோதனை நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, முளைப்புத்திறன், விதை சட்ட விதிகளை மீறியதாக, 5.79 லட்சம் மதிப்புள்ள, 22,750 கிலோ விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், திருவாரூர் ஆகிய பகுதிகளில், 14 விற்பனை நிலையங்களில், 61 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
அதில், 16,150 கிலோ நெல் விதைகள் விற்பனைக்கு உகந்தது அல்ல என, அதிகாரிகள் தடை செய்தனர்.