/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் ஆபீசில் தர்ணா
/
டாஸ்மாக் கடையை அகற்ற கலெக்டர் ஆபீசில் தர்ணா
ADDED : பிப் 25, 2025 04:20 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அருமலைக்கோட்டை கிராமத்தில் இருந்து, செண்பகபுரம், ஆர்.சுத்திப்பட்டு உட்பட பகுதிகளுக்கு செல்லும் வழியில், டாஸ்மாக் கடை உள்ளது.
இதனால், அப்பகுதி வழியாக செல்வோர், வெகுவாக பாதிக்கப்படுவதாகக் கூறி, கடையை அகற்ற, அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர்.
கடந்த ஜன., 21ல், அருமலைக்கோட்டை அருணாச்சலம் என்பவரை, விவேக் என்ற இளைஞர் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்தார். அப்போது, அருணாச்சலத்தின் உறவினர்கள், டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் ஆர்.டி.ஓ., இலக்கியா மற்றும் போலீசார், கடையை மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இந்நிலையில், கிராம மக்கள், நேற்று காலை டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா செய்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்திய, 47 பேரை போலீசார் கைது செய்தனர்.