/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
50 கிலோ மூட்டையில் நெல் கொள்முதல் குழு அமைப்பதாக ராதாகிருஷ்ணன் உறுதி
/
50 கிலோ மூட்டையில் நெல் கொள்முதல் குழு அமைப்பதாக ராதாகிருஷ்ணன் உறுதி
50 கிலோ மூட்டையில் நெல் கொள்முதல் குழு அமைப்பதாக ராதாகிருஷ்ணன் உறுதி
50 கிலோ மூட்டையில் நெல் கொள்முதல் குழு அமைப்பதாக ராதாகிருஷ்ணன் உறுதி
ADDED : ஆக 03, 2024 08:08 PM
தஞ்சாவூர்,:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கொத்தங்குடி மற்றும் நீலத்தநல்லுார் பகுதிகளில், நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கூட்டுறவு, உணவு துறை அரசு கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
தமிழகம் முழுதும், புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகிறது. தெற்காசியாவில் பெரிய சேமிப்பு கிடங்கான கோவில்பத்து கிடங்கில் அடிப்படை வசதிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாலுகாவிற்கு ஒரு சேமிப்பு கிடங்கு வேண்டும். நிரந்த சேமிப்பு கிடங்குகளில் வாகனங்கள் செல்லும் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவு சங்க செயலர்கள், கொள்முதல் நிலைய பணியாளர்கள் ஒரே இடத்தில் பணியாற்றுவதால் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார் வருகிறது. விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல், 40 கிலோ மூட்டையாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதை, 50 கிலோ மூட்டையில் கொள்முதல் செய்ய விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகள் கருத்துகளை பதிவு செய்து, அதற்கென தனியாக குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கொள்முதல் பணியாளர்கள் விவசாயிகளிடம் பணம் கேட்டால், பணி நீக்கம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.