/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் நிலம் மீட்பு
/
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் நிலம் மீட்பு
ADDED : ஜூலை 13, 2024 09:38 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 2.27 ஏக்கர் பரப்பளவு உள்ள நன்செய் நிலங்கள் மற்றும் 2.06 ஏக்கர் நிலம் என மொத்தம், 4.33 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தன.
இந்நிலங்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரிடம் குத்தகையில் இருந்தது. அவர்கள் குத்தகை தொகையை சரிவர செலுத்தவில்லை. இதனால், 3 லட்சம் ரூபாய் வரை குத்தகை பாக்கி இருந்ததால், கோவில் நிர்வாகம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவிதா தலைமையில், கோவில் நிலங்கள் தனி தாசில்தார் பார்த்தசாரதி முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் நிலத்தை கையகப்படுத்தி அதில் அறிவிப்பு பலகை வைத்தனர். மீட்கப்பட்ட நிலங்கள் விரைவில் பொது ஏலத்திற்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.