/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பாதாள சாக்கடையில் மண் சரிந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்

ADDED : ஆக 07, 2024 01:18 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், விளார் சாலையில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, மண் சரிந்து இரண்டு தொழிலாளர்கள் சிக்கினர். இதில் ஜெய நாராயண மூர்த்தி,27, மண் சரிவில் சிக்கி இறந்தார். மற்றொரு தொழிலாளி தேவேந்திரனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் நேற்று இறந்த ஜெயநாராயண மூர்த்தியின் மனைவி சுகன்யா மற்றும் உறவினர்கள், சி.பி.எம்., தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின் படி பாதாள சாக்கடை சீரமைப்பு பணியில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி மேயர் ராமநாதன் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், இறந்தவரின் உடல் மருத்துவமனையில் சவக்கிடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜெயநாராயணமூர்த்தி மனைவி சுகன்யா, தெற்கு போலீசில் தனது கணவர் உயிரிழப்புக்கு காரணமாக அஜாக்கிரதையுடன் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் மாநகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டோர் மீது பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் நிவாரணம் அறிவிப்பு:
முதல்வர் ஸ்டாலின், விபத்தில் இறந்த ஜெயநாராயணமூர்த்தி குடும்பத்துக்கு முதலவரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்த தேவேந்திரனுக்கு ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்தும், காயமடைந்தவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.