/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
பாலியல் புகாரில் அலைக்கழிப்பு ஆயுத படைக்கு எஸ்.ஐ., மாற்றம்
/
பாலியல் புகாரில் அலைக்கழிப்பு ஆயுத படைக்கு எஸ்.ஐ., மாற்றம்
பாலியல் புகாரில் அலைக்கழிப்பு ஆயுத படைக்கு எஸ்.ஐ., மாற்றம்
பாலியல் புகாரில் அலைக்கழிப்பு ஆயுத படைக்கு எஸ்.ஐ., மாற்றம்
ADDED : ஆக 19, 2024 07:03 AM
ஒரத்தநாடு: தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணை, அப்பகுதியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காத, ஒரத்தநாடு அனைத்து மகளிர் எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்த, 12ம் தேதி பாப்பாநாடு போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க சென்றார். பணியில் இருந்த பெண் எஸ்.ஐ., சூர்யா பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் மனு பெறாமல், ஒரத்தநாடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி, அலைக்கழித்தார்.
இது குறித்து எழுந்த புகாரின் படி, போலீஸ் ஸ்டேஷன் வந்த பெண்ணுக்கு உடனடியாக சட்ட உதவி வழங்காமல் அவரை அலைக்கழித்தும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாகவும், தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ்ராவத், எஸ்.ஐ., சூர்யாவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துள்ளார்.