/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
கலெக்டர் பெயரை எழுத்துக்கள் மூலம் ஓவியமாக வரைந்து பரிசளித்த மாணவி
/
கலெக்டர் பெயரை எழுத்துக்கள் மூலம் ஓவியமாக வரைந்து பரிசளித்த மாணவி
கலெக்டர் பெயரை எழுத்துக்கள் மூலம் ஓவியமாக வரைந்து பரிசளித்த மாணவி
கலெக்டர் பெயரை எழுத்துக்கள் மூலம் ஓவியமாக வரைந்து பரிசளித்த மாணவி
ADDED : பிப் 22, 2025 08:22 AM

தஞ்சாவூர்; தஞ்சாவூர், பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்தில், கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லுாரி சார்பில், ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சி நேற்று துவங்கியது. இதனை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் துவக்கி வைத்தார். இதில், 220 மாணவர்களின், ஆயில் கலர், அக்ரிலிக் கலர், நீர் வண்ண ஓவியங்கள், மரச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோக சிற்பங்கள், விழிப்புணர்வு போஸ்டர்கள், போட்டோக்கள் என 400க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
மேலும், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், துணியில் சாயமிடுதல், காகிதக் பொம்மை பொம்மலாட்டம், களிமண் சிற்பம், போட்டோக்கிராபி பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இக்கண்காட்சி நாளை 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில், விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர் சக்திவேல்,27, கும்பகோணத்தில் உள்ள பழமையான வீட்டினை மினியேச்சராக தத்ரூபமாக உருவாக்கி வைத்து இருந்தார். இதை உருவாக்க ஆறு மாத காலம் ஆனது தெரிவித்தார்.
மேலும்,கும்பகோணத்தை சேர்ந்த துர்கா,23, என்ற மாணவி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஐ.ஏ.எஸ்., என 6 மணி நேரம் 20 நிமிடங்களில் பென்சிலில் வரைந்த ஓவியத்தை, கலெக்டருக்கு வழங்கினார். மேலும், அவர் 10 கிலோ களிமண் மற்றும் பைபரை பயன்படுத்தி, கேளரா மாநிலம் வயநாடு நிலச்சரிவின் போது யானைக்கூட்டத்தின் மத்தியில் பாதுகாப்பாக இருந்த மூதாட்டி மற்றும் அவரது பேத்தி குறித்த படைப்பையும் உருவாக்கி காட்சிப்படுத்தி இருந்தார். அந்த படைப்பு அனைவரதுகவனத்தையும் ஈர்த்தது.
இது குறித்து துர்கா கூறியதாவது:
கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செயல்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்தது. எனவே தான் அவருது பெயர், பதவியை கொண்டு, அவரது உருவப்படத்தை 6 மணிநேரம் 20 நிமிடத்தில் வரைந்து பரிசாக கொடுத்தேன். இதேபோல் வயநாடு மூதாட்டி சம்பவத்தின் பைபர் சிற்பத்தை 10 கிலோ களிமண்ணை அச்சு எடுத்து, பைபரில் செய்து, ஓவியமாக உருவம் கொடுத்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

