/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
ஆலை நிர்வாகத்தை கண்டித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
ஆலை நிர்வாகத்தை கண்டித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆலை நிர்வாகத்தை கண்டித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஆலை நிர்வாகத்தை கண்டித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 14, 2024 10:49 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில், தமிழக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமையில், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவிரி உரிமை மீட்பு குழு என ஏராளமான கரும்பு விவசாயிகள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:
இந்த சர்க்கரை ஆலை, நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி தவிக்கிறது. சமீபத்தில் பெய்த மழையில், ஆலையில் 2,500 சர்க்கரை மூட்டை நனைந்து வீணாகி விட்டன. இதை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
இதற்காக, தகவல் வெளியே போனது எப்படி என கேட்டு, அலுவலர்களை டார்ச்சர் செய்துள்ளனர். தவறுகள் குறித்து முறையாக சொன்னால் நடவடிக்கை எடுப்பது கிடையாது. இதே நிலை நீடித்தால் குருங்குளம் சர்க்கரை ஆலை மூடப்படும் நிலை ஏற்படும். ஆலைக்கு கடன் ஏற்படும் நிலையில் ஊழியர்கள் நடக்கின்றனர். முதல்வர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, நிர்வாக சீர்கேடுகளை களைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி மறியல் நடத்தப்படும்.
இவ்வாறு கூறினார்.