/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
போக்சோவில் கைதான வாலிபர் ஸ்டேஷனில் தற்கொலை முயற்சி
/
போக்சோவில் கைதான வாலிபர் ஸ்டேஷனில் தற்கொலை முயற்சி
போக்சோவில் கைதான வாலிபர் ஸ்டேஷனில் தற்கொலை முயற்சி
போக்சோவில் கைதான வாலிபர் ஸ்டேஷனில் தற்கொலை முயற்சி
ADDED : ஆக 01, 2024 10:48 PM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பாதரங்கோட்டை அருகே கீழ கொள்ளுகாடு கிராமத்தை சேர்ந்த கார்த்தி, 28, அதே கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமான நிலையில், ஒரத்தநாடு போலீசார் கார்த்தி மீது போக்சோ வழக்கு பதிந்தனர். தலைமறைவான கார்த்திக்கை, நேற்று முன்தினம் இரவு ஒரத்தநாடு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் உறவினர்கள் ஒப்படைத்தனர்.
நேற்று காலை உடல்நிலை பாதிக்கப்பட்டு கார்த்திக் தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் மருத்துவமனை சென்று விசாரித்த போது, முதலில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், பின்னர் வலிப்பு ஏற்பட்டதாகவும் போலீசார் மாறி மாறி கூறியுள்ளனர்.
சந்தேகமடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் விசாரித்ததில், 'கார்த்தி துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது கழுத்து பகுதி பாதிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், கார்த்தி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் அலட்சியமாக செயல்பட்டதாக, கார்த்தி உறவினர்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர்.