/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
வரி கட்டாத வணிக வளாகம் குப்பையால் வழிக்கு வந்தது
/
வரி கட்டாத வணிக வளாகம் குப்பையால் வழிக்கு வந்தது
ADDED : பிப் 22, 2025 01:47 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், நல்லைய்யா வணிக வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. இங்கு, 20 ஆண்டுகளாக, 47 லட்சம் ரூபாய் சொத்துவரி பாக்கி வைத்திருந்தனர். மாநகராட்சி பலமுறை கேட்டும், செலுத்தவில்லை. மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.
நேற்று காலை, மாநகராட்சி நிர்வாகத்தினர், வணிக வளாகத்தின் ஒரு நுழைவாயிலில் குப்பை வண்டியை நிறுத்தி, மற்றொரு வாயிலில் குப்பையை கொட்டினர். இதனால், வணிக வளாகத்துக்கு வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் முகம் சுளித்தனர்.
உடனடியாக, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, வணிக வளாக உரிமையாளர்கள், மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தினர். வணிக வளாகம் முன் இருந்த குப்பை வண்டி, குப்பை அகற்றப்பட்டன. அதிக தொகை வரி பாக்கி வைத்துள்ளவர்களிடம் இதுபோன்ற அதிரடி நடவடிக்கையை தொடர உள்ளதாக மாநகராட்சியினர் தெரிவித்தனர்.