/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
இளம்பெண் பலாத்காரம்; அண்ணன் தம்பி கைது
/
இளம்பெண் பலாத்காரம்; அண்ணன் தம்பி கைது
ADDED : ஆக 27, 2024 11:37 PM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியை சேர்ந்த, 23 வயது இளம்பெண்ணை, கடந்த, 12ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27.
பிரவீன், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். கவிதாசன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில், பாப்பாநாடு வேல்முருகன், 20, அவரது 17 வயது தம்பி ஆகியோருக்கும் தொடர்பு இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரிந்தது.
இதன் படி, ஒரத்தநாடு மகளிர் போலீசார் நேற்று முன்தினம் வேல்முருகன், அவரது தம்பியை கைது செய்து, வேல்முருகனை திருச்சி மத்திய சிறையிலும், அவரது தம்பியை தஞ்சாவூர் சிறார் இல்லத்திலும் அடைத்தனர்.