/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
தேரோட்டத்தில் சுவர் இடிந்து இருவர் காயம்
/
தேரோட்டத்தில் சுவர் இடிந்து இருவர் காயம்
ADDED : ஏப் 23, 2024 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று சாரங்கபாணி கோவிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
தேர் மேலவீதியில் வந்து கொண்டிருந்த போது, போதிய இடம் இல்லாதததால், வணிக நிறுவனத்தின் பக்கவாட்டுச் சுவர் மீது இடித்து நின்றது. பிறகு, தேரை வேகமாக நகர்த்தும் போது, அந்த சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில், அங்கு நின்றுக்கொண்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த நாராயணன், 23, பிரபாகரன், 20, ஆகிய இருவர், பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

