/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
டூ - வீலர்கள் மோதியதில் இளைஞர்கள் இருவர் பலி
/
டூ - வீலர்கள் மோதியதில் இளைஞர்கள் இருவர் பலி
ADDED : செப் 03, 2024 02:30 AM
பட்டுக்கோட்டை,: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பள்ளத்துாரைச் சேர்ந்தவர் அரவிந்தன், 27, திருமணமானவர். இவர், நேற்று முன்தினம் மாலை, டி.வி.எஸ்., டூ - வீலரில், பள்ளத்துாரில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்றார்.
அப்போது, தஞ்சாவூர் தொம்பன்குடிசையைச் சேர்ந்த அருண்குமார், 25, மனைவி நர்மதாவுக்கு, வரும், 19ம் தேதி வளைகாப்பு நடத்த உள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழை, பட்டுக்கோட்டை அருகே அழகியநாயகிபுரத்தில் உள்ள தன் மாமா வீட்டில் கொடுப்பதற்காக, நண்பரான சாரோன், 20, என்பவருடன், பல்சர் டூ - வீலரில் வந்தனர். டூ - வீலரை சாரோன் ஓட்டினார்.
கோட்டாகுடி பகுதியில், அரவிந்தன், சாரோன் இருவரும் ஓட்டிய வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், அரவிந்தன், சாரோன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அருண்குமார் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.