/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
விண்ணப்ப நிராகரிப்பு ஏன்? 'ஸ்டார் ஹெல்த்'திடம் கேள்வி! ரூ.16 லட்சம் வழங்க உத்தரவு

ADDED : ஆக 29, 2024 02:18 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூரைச் சேர்ந்தவர், ராஜேஷ், 35. இவர், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம், 'ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனத்தில், குடும்ப மருத்துவக் காப்பீடு செய்து இருந்தார். அதன் காப்பீட்டுக் காலம், அமலில் இருந்த நிலையில், அவருக்கு, 2022, அக்., 4ம் தேதி, திடீரென நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கான மருத்துவ செலவுத் தொகை, 11 லட்சம் ரூபாயை கேட்டு, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்தார்.
ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், பாலிசி எடுக்கும் முன்பே, ராஜேஷுக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும், அதை மறைத்து பாலிசி எடுத்ததால், மருத்துவ செலவினத் தொகையை வழங்க முடியாது எனக் கூறி, விண்ணப்பத்தை நிராகரித்தது. தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், அவர் புகார் அளித்தார்.
விசாரித்த ஆணையம், மருத்துவ செலவு, 11 லட்சம் ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது.
மேலும், காப்பீடு எடுத்த ராஜேஷுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நேற்று உத்தரவிட்டது.