/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
2020- --- 21க்கான பதக்கத்தை 'இவ்வளவு சீக்கிரமாவா' தருவீங்க?
/
2020- --- 21க்கான பதக்கத்தை 'இவ்வளவு சீக்கிரமாவா' தருவீங்க?
2020- --- 21க்கான பதக்கத்தை 'இவ்வளவு சீக்கிரமாவா' தருவீங்க?
2020- --- 21க்கான பதக்கத்தை 'இவ்வளவு சீக்கிரமாவா' தருவீங்க?
ADDED : பிப் 23, 2025 01:40 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றிய 8 பேருக்கு, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அதி உத்கிரிஷ்டா சேவா பதக் என்ற பதக்கங்களை, எஸ்.பி., ராஜராம் நேற்று வழங்கினார். இந்த பதக்கம், 2020 - 21ம் ஆண்டுக்கானது.
உளவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய பட்டுக்கோட்டை அருகே குறிச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., துரைமாணிக்கம், தஞ்சையை சேர்ந்த எஸ்.ஐ., மோகன், தஞ்சாவூர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும் பத்மநாபன் ஆகிய மூவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் கிழக்கு ஸ்டேஷனில் பணியாற்றும் சரஸ்வதி, சரவணன், தெற்கு ஸ்டேஷனில் பணியாற்றும் ஆல்பர்ட் டென்னிஸ், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சென்னையில் பணியாற்றும் முத்துகிருஷ்ணன், கும்பகோணம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் சுரேஷ் ஆகிய ஐவருக்கும் வெள்ளிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக, பதக்கங்களை பெற்றவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது.