/
உள்ளூர் செய்திகள்
/
தஞ்சாவூர்
/
'இளம்பெண் கூட்டு பலாத்காரம் குற்றவாளிக்கு தண்டனை உறுதி'
/
'இளம்பெண் கூட்டு பலாத்காரம் குற்றவாளிக்கு தண்டனை உறுதி'
'இளம்பெண் கூட்டு பலாத்காரம் குற்றவாளிக்கு தண்டனை உறுதி'
'இளம்பெண் கூட்டு பலாத்காரம் குற்றவாளிக்கு தண்டனை உறுதி'
ADDED : ஆக 15, 2024 01:34 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்த, 23 வயது பி.எஸ்சி., பட்டதாரி பெண், சென்னையில் வேலை பார்க்கிறார்.
சில நாட்களுக்கு முன், விடுமுறைக்காக அந்த பெண் ஊருக்கு வந்த போது, ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகைக்கு இழுத்துச் சென்ற கவிதாசன் என்பவர், தன் நண்பர்கள் மூவருடன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில், கவிதாசன் மற்றும் அவரின் நண்பர்கள் மீது புகார் அளித்தார். போலீசார் நேற்று முன்தினம் கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்தனர்.
அதில், கஞ்சா போதையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்தது தெரிந்தது.
கைதாகியுள்ள கவிதாசன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தில் இருந்தாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், எஸ்.பி., அஷிஷ் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இளம்பெண் பலாத்காரம் வழக்கில், 60 நாட்களில் வழக்கை முடித்து தண்டனை உறுதி செய்யப்படும்.
முக்கிய குற்றவாளி மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளோம். கைதானவர்களுக்கு அரசியல் பின்னணி உள்ளதா என விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.